பள்ளிபாளையம் அருகே ஓய்வு பெற்ற சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் 40 பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


பள்ளிபாளையம் அருகே  ஓய்வு பெற்ற சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் 40 பவுன் நகை திருட்டு  மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-24T00:16:12+05:30)

பள்ளிபாளையம் அருகே ஓய்வு பெற்ற சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் 40 பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

நாமக்கல்

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அருகே ஓய்வு பெற்ற சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் 40 பவுன் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பின்கதவு உடைப்பு

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்த தாஜ்நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 64). பொன்னி சர்க்கரை ஆலையில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி பார்வதி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி சந்திரசேகர் தனது மனைவி பார்வதியை கோவையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தனர். பின்னர் வீட்டின் உள்ளே சென்றபோது பின்கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வலைவீச்சு

பின்னர் வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 40 பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து சந்திரசேகரன் பள்ளிபாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், சப்- ்இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். திருச்செங்கோடு துணை போலீஸ் மகாலட்சுமி சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த துணிகர திருட்டு சம்பவம் குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story