கோவில் உண்டியலை உடைத்து நகை, பணம் திருட்டு
கோவில் உண்டியலை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது.
விருதுநகர்
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை வெள்ளக்கோட்டை பகுதியில் காமராஜர் சிலை பின்புறம் உச்சி மாகாளி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பூசாரியாக விவேகானந்தன் என்பவர் உள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை அவர் மீண்டும் வந்து கோவிலை திறந்து பார்த்த போது உள்ளே இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த நகை, பணம் திருடு போயிருந்தது. நவராத்திரி காணிக்கையை குறிவைத்து இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே கோவிலில் கடந்த 5.8.2022 அன்றும் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story