வெவ்வேறு இடங்களில் 5½ பவுன் நகை திருட்டு
வெவ்வேறு இடங்களில் 5½ பவுன் நகை திருட்டு போனது.
விருதுநகர்
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே தோப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மீனா (வயது 29). சம்பவத்தன்று இவர் வீட்டு கதவை பூட்டாமல் தூங்கி விட்டார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் மீனாவின் கழுத்தில் கிடந்த 3½ பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர். இதுகுறித்து மீனா கொடுத்த புகாரின்பேரில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்குறிச்சி பாரதிநகரை சேர்ந்தவர் லட்சுமி (45). இவர் கம்பாளி கிராமத்தில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி சாவியை வெளியே வைத்துவிட்டு சென்றார். மறுநாள் வந்து பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 2 பவுன் செயினை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இது குறித்த புகாரின்பேரில் மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story