சென்னிமலையில் நிதி நிறுவன உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு- மர்ம நபர்கள் கைவரிசை


சென்னிமலையில் நிதி நிறுவன உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு- மர்ம நபர்கள் கைவரிசை
x

சென்னிமலையில் நிதி நிறுவன உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு- மர்ம நபர்கள் கைவரிசை

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலை கிழக்கு புது வீதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 49). இவர் சென்னிமலை மாரியம்மன் கோவில் எதிரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு அண்ணாதுரை குடும்பத்துடன் வெளியூருக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று பகல் 10.30 மணியளவில் வீட்டுக்கு வந்தபோது அப்போது வீட்டின் வெளிப்புற கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்குள்ள பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் ரூ.34 ஆயிரம் திருட்டு போயிருந்ததை கண்டார். மேலும் வீட்டில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி குத்துவிளக்கு, வெள்ளி டம்ளர் மற்றும் வெள்ளி பொருட்களால் ஆன சாமி சிலைகள் உள்பட 15 வெள்ளி பொருட்கள் திருட்டு போய் இருந்தது. ஆட்கள் இல்லாததை மர்ம நபர்கள் நோட்டமிட்டு வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் அவருடைய வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டபோது அண்ணாதுரையின் வீட்டுக்கு 3 பேர் மோட்டார்சைக்கிளில் வந்து சென்றது தெரியவந்தது. இந்த காட்சியை வைத்து மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story