மளிகை கடை கதவை உடைத்து திருட்டு
மளிகை கடை கதவை உடைத்து திருடப்பட்டது.
சிவகங்கை
காரைக்குடி,
காரைக்குடி வ.உ.சி. சாலையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 41). இவர் கழனி வாசல் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு மணிகண்டன் வழக்கம்போல கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலையில் கடையை திறக்க வந்தபோது கடையின் கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மணிகண்டன் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு கல்லாவில் வைத்திருந்த ரூ.40 ஆயிரத்தை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து அவர் வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story