தனியார் நிறுவனத்தில் ரூ.1½ லட்சம் பொருட்கள் திருட்டு


தனியார் நிறுவனத்தில் ரூ.1½ லட்சம் பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 3 Nov 2022 12:15 AM IST (Updated: 3 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் தனியார் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிய கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூரில் தனியார் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிய கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

தனியார் நிறுவனம்

ஓசூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் வசந்த சந்திரன் (வயது68). இவர், ஓசூரில் ஒன்னல்வாடி சாலையில், சோலார் எந்திரம் தொடர்பான நிறுவனம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு பணிகள் முடிந்ததும் வழக்கம் போல், நிறுவனத்தை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் அவர் நிறுவனத்தை திறக்க வந்தார்.

அப்போது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது 550 கிலோ அலுமினியம் மற்றும் 250 கிலோ இரும்புக்கம்பி, காப்பர் வயர் 15 கிலோ ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. மேலும் 1 கட்டிங் எந்திரம், 2 வெல்டிங் எந்திரம் மற்றும் 4 பேட்டரிகள் ஆகியவையும் திருட்டு போனது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.

கட்டிட தொழிலாளி கைது

இந்த திருட்டு சம்பவம் குறித்து சந்திரன் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஓசூர் சானசந்திரம் கடவுள் நகரை சேர்ந்த கட்டிட தொழிலாளி சக்திவேல் (28) என்பவர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து கட்டிங் எந்திரம் மற்றும் 2 பேட்டரிகளை போலீசார் மீட்டனர். தொடர்ந்து அவரிடம் ேபாலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story