வீட்டு கதவை திறந்து நகை திருட்டு
திருப்பத்தூர் அருகே வீட்டு கதவை திறந்்து நகை திருடப்பட்டது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே வீட்டு கதவை திறந்்து நகை திருடப்பட்டது.
நகை திருட்டு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஒழுகமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகுமாரி (வயது 25). இவரது கணவர் வடிவேல் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலையில் ராஜகுமாரி வீட்டை பூட்டி விட்டு சாவியை வெளியில் ஒரு இடத்தில் மறைத்து வைத்துவிட்டு வயலுக்கு விவசாய வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மாலையில் அவர் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜகுமாரி வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோதிறக்கப்பட்டு அதில் வைத்திருந்த மோதிரம், செயின், தோடு உள்ளிட்ட 5 பவுன் தங்க நகைகள் மற்றும் 3 வெள்ளி கொலுசுகளை காணவில்லை. மர்ம நபர்கள் வீட்டு சாவியை எடுத்து கதவை திறந்து நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இது தொடர்பாக ராஜகுமாரி, நெற்குப்பை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்ே்பரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ெசன்று விசாரணை நடத்தினர். இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.