வீட்டு கதவை உடைத்து திருட்டு
காரைக்குடியில் வீட்டின் கதவை உடைத்து தங்க, வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றனர். தொடர்ந்து நடைபெறும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
காரைக்குடி,
காரைக்குடியில் வீட்டின் கதவை உடைத்து தங்க, வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றனர். தொடர்ந்து நடைபெறும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
திருட்டு
காரைக்குடி பர்மா காலனி, தந்தை பெரியார் நகர் 5-வது வீதியை சேர்ந்தவர் ஷகீலா பானு (வயது 36). சம்பவத்தன்று இவர் மங்கலக்குடியில் உள்ள தனது உறவினர் இறந்த காரணத்தால் வீட்டை பூட்டி விட்டு அங்கு சென்று விட்டார். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவை உடைத்து உள்ளே இருந்த ரூ.1½ லட்சம் மதிப்புள்ள தங்க, வெள்ளி பொருட்களை திருடிக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.
இதற்கிடையே 2 நாட்கள் ஷகீலா பானு கழித்து வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு, நகைகள் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தொடரும் சம்பவம்
இது குறித்து அவர் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
காரைக்குடியில் கடந்த சில நாட்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியே செல்ல அச்சம் அடைகின்றனர். மேலும், போலீசா் இரவு நேரத்தில் ரோந்து பணியினை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.