வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 17 Nov 2022 12:15 AM IST (Updated: 17 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் திருடப்பட்டது.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி அடுத்த பள்ளத்தூர் போலீஸ் சரகம் கோட்டையூர் நந்தனம் வீதியை சேர்ந்தவர் செல்வகணபதி (வயது 45). இவர் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு பெங்களூரு சென்றிருந்தார். நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு திறந்த கிடந்தது, இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே ெசன்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த ரூ.2 லட்சம் மற்றும் ஒரு தங்ககாசு ஆகியவற்றை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் பள்ளத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story