கோபி அருகே கோவில் உண்டியலை தூக்கி சென்று பணம் கொள்ளை; மர்மநபர்களுக்கு வலைவீச்சு
கோபி அருகே கோவில் உண்டியலை தூக்கி சென்று பணம் கொள்ளை; மர்மநபர்களுக்கு வலைவீச்சு
கடத்தூர்
கோபி அருகே மல்லிபாளையத்தில் அண்ணமார் கோவில் உள்ளது. இங்கு பவுர்ணமி, அமாவாசை தினங்களில் கோவிலில் பூஜை நடைபெறும். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த வழியாக சென்றவர்கள் கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்தனர்.
இதுபற்றி அறிந்ததும் கோவில் நிர்வாகத்தினர் அங்கு சென்று பார்த்த போது கோவில் உள்ளே வைக்கப்பட்டு இருந்த உண்டியலை காணவில்லை. இதனால் உண்டியலை தேடிப்பார்த்தபோது அது கோவில் அருகே உள்ள ரோட்டோரத்தில் வீசப்பட்டு கிடந்தது. அதிலிருந்த காணிக்கை பணத்தை காணவில்லை.
இதுகுறித்து கோவில் பூசாரி தெய்வசிகாமணி சிறுவலூ்ா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், 'கோவில் பூட்டப்பட்டு் கிடப்பதை அறிந்த மர்மநபர்கள் கடந்த 1-ந் தேதி இரவு அங்கு சென்று கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த உண்டியலை வெளியே எடுத்து சென்று கோவிலில் உள்ள வேல் கம்பால் நெம்பி திறந்து அதிலுள்ள காணிக்கை பணத்தை கொள்ளையடித்துள்ளனர். அதன்பின்னர் அருகே உள்ள ரோட்டோரத்தில் உண்டியலை வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது'. உண்டியலில் சுமார் ரூ.1,500 இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து உண்டியல் பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.