அரசு பள்ளியில் கண்காணிப்பு கேமராக்கள் திருட்டு
அரசு பள்ளியில் கண்காணிப்பு கேமராக்கள் திருட்டு போனது.
ராமநாதபுரம்
திருப்புல்லாணி, -
திருப்புல்லாணி அருகே உள்ள பெரியபட்டினம் அரசு மேல் நிலைப்பள்ளியில் விடுமுறை நாட்களில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து அட்டகாசம் செய்து வந்தனர். இதையடுத்து பள்ளி வளாகத்தில் 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் பள்ளிக்குள் புகுந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த 7 கேமராக்களை திருடியதோடு ஒரு கேமராவை உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ.20 ஆயிரம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் தபசுமுத்து திருப்புல்லாணி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story