பலசரக்கு கடையில் ரூ.72 ஆயிரம் திருட்டு
பலசரக்கு கடையில் ரூ.72 ஆயிரம் திருடப்பட்டது.
மதுரை
பேரையூர்,
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா குருவப்ப நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பெரியசிக்கந்தர் (வயது 49). இவர் அங்கு பலசரக்குகடை மற்றும் நவதானிய கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு தனது கடையில் வியாபாரம் செய்த ரூ.72 ஆயிரத்தை கடையில் வைத்து விட்டு, கடையை பூட்டி சென்றார். மறுநாள் காலையில் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்தார். அப்போது கடையில் வைக்கப்பட்டு இருந்த ரூ.72 ஆயிரத்தை காணவில்லை. மர்மநபர்கள் கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பெரிய சிக்கந்தர் பேரையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணத்தை திருடிய நபரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story