வீட்டின் பூட்டை உடைத்து 38 பவுன் நகை, பணம் திருட்டு
இளையான்குடி அருகே உள்ள மெய்யனேந்தல் கிராமத்தில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 38 பவுன் தங்க நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் திருடப்பட்டது.
வீட்டின் பூட்டை உடைத்து 38 பவுன் நகை, பணம் திருட்டுஇளையான்குடி,
இளையான்குடி அருகே உள்ள மெய்யனேந்தல் கிராமத்தில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 38 பவுன் தங்க நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் திருடப்பட்டது.
நகை, பணம் திருட்டு
இளையான்குடி அருகே உள்ள மெய்யனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மனைவி அம்பிகா. சாமிநாதன் கத்தார் நாட்டில் வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி அம்பிகா நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு 100 நாள் வேலைக்கு சென்று விட்டார். இதற்கிடையே சாமிநாதனின் தந்தை குருசாமி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவுகள் திறக்கப்பட்டு அருகில் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளது.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோ உடைக்கப்பட்டு துணிமணிகள் ஆங்காங்்கே சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 38 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
பொதுமக்கள் அச்சம்
இச்சம்பவம் தொடர்பாக இளையான்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயின் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து அம்பிகா அளித்த புகாரின் பேரில் இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.