வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள்கள் திருட்டு


வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
x

பள்ளிபாளையம் அருகே முகமூடி அணிந்து வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள்கள் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாமக்கல்

பள்ளிபாளையம்

மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

பள்ளிபாளையம் அடுத்த ஆயக்காட்டூர் சத்யா நகர் பகுதியில் இரவு நேரத்தில் முகமூடி அணிந்த திருடர்கள் இருசக்கர வாகனங்களை அடிக்கடி திருடி செல்வது வழக்கமாகிவிட்டது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு அதே பகுதியில் இரு சக்கர வாகனங்களை திருடி சென்றதாக பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிபாளையம் போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.

வலைவீச்சு

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது முகமூடி அணிந்த 2 வாலிபர்கள் அந்த பகுதிக்கு வந்தனர். பின்னர் வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களை அவர்கள் திருடி செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இரு சக்கர வாகனங்களை திருடி சென்ற முகமூடி அணிந்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

பள்ளிபாளையம் அருகே முகமூடி அணிந்து வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story