சேர்க்காடு பகுதியில் ஒரே நேரத்தில் 2 மளிகை கடையில் திருட்டு
சேர்க்காடு பகுதியில் ஒரே நேரத்தில் 2 மளிகை கடையில் திருட்டு நடந்துள்ளது.
திருவலம்
சேர்க்காடு பகுதியில் ஒரே நேரத்தில் 2 மளிகை கடையில் திருட்டு நடந்துள்ளது.
சேர்க்காடு நான்கு வழி சாலையில் இருந்து காட்பாடி செல்லும் பிரதான சாலையில் ராமமூர்த்தி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு சுமார் 10 மணிக்கு மேல் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலை கடையை திறப்பதற்காக வந்தபோது அவருடைய கடையின் ஷட்டர் நீக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது கடையின் கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்கள் திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இவரது கடைக்கு பக்கத்தில் உள்ள பன்னீர்செல்வம் என்பவரது மளிகை கடையிலும் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து பணம் மற்றும் செல்ேபானை திருடி சென்றுள்ளனர்.
இது குறித்து இருவரும் திருவலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் கடையில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது அதிகாலை சுமார் 3 மணி அளவில் கடையின் உள்ளே நுழைந்து திருடர்கள் திருடி சென்றது பதிவாகியுள்ளது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி.கேமராவில் பதிவலான திருடரை அடையாளம் கண்டு கைது செய்யநடவடிக்கை எடுத்து வருகின்றனர்.