செல்போன் கடையில் திருட்டு
செல்போன் கடையில் பூட்டை உடைத்து திருடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
செல்போன் கடையில் பூட்டை உடைத்து திருடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை முகல்புறா தெருவை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 29). இவர் திருவண்ணாமலை -வேட்டவலம் சாலையில் உள்ள வேடியப்பன் கோவில் தெருவில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதாக அக்கம் பக்கத்தினர் சத்யராஜுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உஉடனடியாக அவர் கடைக்கு வந்து பார்த்தபோது கடையில் இருந்த 12 'ப்ளூடூத்' ஹெட் போன், 6 பவர் பேங்க் மற்றும் கடையின் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.1,800 மர்ம நபர்களால் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இது குறித்து அவர் திருவண்ணாமலை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.