எல்ைலயம்மன் கோவிலில் திருட்டு


எல்ைலயம்மன் கோவிலில் திருட்டு
x

இச்சிபுத்தூரில் எல்ைலயம்மன் கோவிலில் திருடிய நபர்களை போலீசார்தேடி வருகின்றனர்.

ராணிப்பேட்டை

அரக்கோணத்தை அடுத்த இச்சிபுத்தூர் கிராமத்தில் எல்லையம்மன் கோவில் உள்ளது. மர்ம நபர்கள் இந்த கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்த உண்டியலை உடைத்துள்ளனர். உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்ட பொது மக்கள் அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து அம்மன் சிலையில் இருந்த சுமார் ஒரு பவுன் தாலி சங்கிலி மற்றும் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலையிலான போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story