வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் நகைகள்-ரூ.8 ஆயிரம் திருட்டு
நன்னிலம் அருகே வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் நகைகள் மற்றும் ரூ.8 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நன்னிலம்:-
நன்னிலம் அருகே வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் நகைகள் மற்றும் ரூ.8 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஓய்வு பெற்ற ராணுவ வீரர்
நன்னிலம் அருகே உள்ள காக்காகோட்டூர் குடியான தெருவை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். சம்பவத்தன்று இவரும், இவருடைய மனைவி செல்லம்மாளும் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தனர்.
மறுநாள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பின்புற கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்கிரிசாமி வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டின் அறையில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு இருந்தது.
வலைவீச்சு
அதில் இருந்த தோடு, சங்கிலி உள்ளிட்ட 4 பவுன் நகைகள், ரூ.8 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை.
இதுகுறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.