தேனி அருகே நாட்டு மருந்து கடையில் பொருட்கள் திருட்டு
தேனி அருகே நாட்டு மருந்து கடையில் பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
தேனி
தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி சஞ்சய் காந்தி தெருவை சேர்ந்தவர் பிரசாத் (வயது 52). இவர் அரசு நகர் மெயின்ரோட்டில் நாட்டுமருந்து கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் திடீரென இறந்து விட்டதால் அவர் 2 மாதங்களாக கடைக்கு செல்லவில்லை. இந்தநிலையில் கடந்த 6-ந்தேதி பிரசாத் கடையை திறக்கச் சென்றார்.
அப்போது கடையில் இருந்த பூட்டு அகற்றப்பட்டு, வேறு பூட்டு போடப்பட்டு இருந்தது. பின்னர், அவர் கடையை திறந்த போது கடைக்குள் இருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள நாட்டு மருந்து பொருட்கள் மற்றும் எந்திரங்கள் மாயமாகி இருந்தன. பொருட்கள் திருட்டு போனது குறித்து அவர் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story