உச்சிமாகாளியம்மன் கோவிலில் நகை திருட்டு


உச்சிமாகாளியம்மன் கோவிலில் நகை திருட்டு
x
தினத்தந்தி 28 Jun 2023 12:48 AM IST (Updated: 28 Jun 2023 4:31 PM IST)
t-max-icont-min-icon

கீழகபிஸ்தலத்தில் உள்ள உச்சிமாகாளியம்மன் கோவிலில் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

கீழகபிஸ்தலத்தில் உள்ள உச்சிமாகாளியம்மன் கோவிலில் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நகை திருட்டு

கபிஸ்தலம் ஊராட்சி கீழ கபிஸ்தலம் பின்னை மரத்து பிள்ளையார் கோவில் அருகே உச்சிமாகாளியம்மன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இக்கோவிலின் முன்புற கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் உள்ளே இருந்த கதவின் பூட்டை உடைத்து கோவிலில் இருந்த உச்சிமா காளியம்மனின் முக்கால் பவுன் நகைகளை திருடிச்சென்றனர்.

மறுநாள் கோவில் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து கோவில் நாட்டாமை பாண்டியனிடம் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் கோவில் நாட்டாமை பாண்டியன் கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

வலைவீச்சு

புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகரன் மற்றும் போலீசார் கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினர். தஞ்சையில் இருந்து தடயவியல் நிபுணர்களை வரவழைத்து சோதனை செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உச்சிமா காளியம்மன் கோவிலில் நகை திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கபிஸ்தலம் பகுதியில் கடந்த 3 நாட்களில் 3 இடங்களில் தொடர்ந்து திருட்டு நடந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story