கிராம நிர்வாக அதிகாரி வீட்டில் திருட்டு


கிராம நிர்வாக அதிகாரி வீட்டில் திருட்டு
x

நத்தத்தில், கிராம நிர்வாக அதிகாரி வீட்டில் நகை, பணம் திருட்டு போனது.

திண்டுக்கல்

நத்தம் அண்ணாநகரை சேர்ந்தவர் சுரேந்திரன் (வயது 50). இவர், ரெட்டியபட்டி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். தனது குழந்தைகளின் படிப்புக்காக மதுரையில் வீடு எடுத்து சுரேந்திரன் தங்கியுள்ளார். வாரத்தில் சில நாட்கள் மட்டுமே, நத்தம் அண்ணாநகரில் உள்ள வீட்டுக்கு அவர் வந்து செல்வது வழக்கம். இந்தநிலையில் நேற்று மதியம் சுரேந்திரன் வீட்டுக்கு வந்தார்.

அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் திருட்டு போய் இருந்தது. வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடியிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து நத்தம் போலீஸ் நிலையத்தில் சுரேந்திரன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story