மூதாட்டி வீட்டில் திருட்டு


மூதாட்டி வீட்டில் திருட்டு
x

ஆண்டிப்பட்டி அருகே மூதாட்டி வீட்டில் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

தேனி

ஆண்டிப்பட்டி அருகே உள்ள பிச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த வேல்ராஜ் தாய் முத்தம்மாள். இவர் அதே கிராமத்தில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 29-ந்தேதி இவர் வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் திரும்பி வந்தபோது வீடு திறந்து கி்டந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகள், ரூ.6 ஆயிரம் திருடுபோய் இருந்தது. இதுகுறித்து வேல்ராஜ் ராஜதானி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story