பெயிண்டு கடையில் திருட்டு
பெரியகுளம் அருகே பெயிண்டு கடையில் திருடுபோனது.
தேனி
தேனியை சேர்ந்தவர் பிரியதர்ஷனி. இவர், பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் பெயிண்டு கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இவர், வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலையில் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைக்கண்ட பொதுமக்கள் பிரியதர்ஷினிக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர் கடைக்கு வந்து பார்த்தார்.
அப்போது கடையில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் திருடுபோய் இருந்தது. இதையடுத்து அவர் தென்கரை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.
Related Tags :
Next Story