தூத்துக்குடி என்ஜின் ஆயில் விற்பனை கடையில் திருட்டு


தூத்துக்குடி என்ஜின் ஆயில் விற்பனை கடையில் ரூ.30 ஆயிரம் திருடப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி பாத்திமா நகரை சேர்ந்தவர் சம்மனசு. இவருடைய மகன் ஜாக்சன் (வயது 32). இவர், தெற்கு பீச் ரோட்டில் என்ஜின் ஆயில் மற்றும் விசைப் படகுகளுக்கான உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டுச் சென்றாராம். நேற்று காலையில் கடையை திறக்க சென்ற போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜாக்சன் உள்ளே சென்று பார்த்த போது, கடையில் இருந்த ரூ.30 ஆயிரம் ரொக்கப்பணம் திருடப்பட்டு இருந்தது.

இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story