புதுச்சத்திரம் அருகே தனியார் நிறுவனத்தில் 300 கிலோ இரும்பு திருட்டு 2 பேர் கைது


புதுச்சத்திரம் அருகே  தனியார் நிறுவனத்தில் 300 கிலோ இரும்பு திருட்டு  2 பேர் கைது
x

புதுச்சத்திரம் அருகே தனியார் நிறுவனத்தில் 300 கிலோ இரும்பு திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்


புதுச்சத்திரம் அருகே பெரியக்குப்பத்தில் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் செயல்படாமல் உள்ளது. இந்த நிறுவனத்தில் புத்திரவள்ளி தெற்கு நுழைவு வாயிலில் பாதுகாப்பு அலுவலராக கடலூர் புதுப்பாளையம் மாருதிநகரை சேர்ந்த சுவாமிநாதன் வேலை செய்து வருகிறார்.

நேற்று இவர் பாதுகாப்பு பணியில் இருந்த போது, 3 பேர் தனியார் நிறுவனத்தில் உள்ள இரும்புகளை திருடி 2 சரக்கு வாகனங்களில் ஏற்றிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த சுவாமிநாதன் தனது காவலாளிகளுடன் சென்று அவர்களில் 2 பேரை கையும், களவுமாக பிடித்தார். மற்றொருவர் தப்பி ஓடி விட்டார். இதையடுத்து பிடிபட்ட 2 பேரையும் அவர்கள் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கைது

அதன்பேரில் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் புதுச்சேரி முருங்கப் பாக்கம் கணபதிநகரை சேர்ந்த அசோக்குமார் மகன் சசிகுமார் (24), முதுநகர் தியாகவல்லி லெனின் நகர் வேல் முருகன் (57) ஆகிய 2 பேர் என்று தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 300 கிலோ இரும்பு, 2 சரக்கு வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய மற்றொருவரை தேடி வருகின்றனர்.


Next Story