கோவிலில் திருட்டு


கோவிலில் திருட்டு
x
தினத்தந்தி 28 March 2023 12:15 AM IST (Updated: 28 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் அருகே கோவிலில் திருட்டு நடைபெற்றது.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள நகரம் பகுதியில் அமைந்துள்ளது திக்குவாய்மொழி அய்யனார் கோவில். இக்கோவில் பூசாரியாக வீரீருப்பைச் சேர்ந்த சுந்தரராஜ் என்பவர் உள்ளார். சம்பவத்தன்று இரவு இவர் கோவிலை பூட்டிவிட்டு மறுநாள் காலையில் வந்தார்.

அப்போது கோவிலில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள், 2 கிராம் தங்கம், உண்டியல் பணம் ஆயிரம் மொத்தம் ரூ.21 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா கருப்பசாமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story