ஒரத்தநாடு நகரில் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள்


ஒரத்தநாடு நகரில் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள்
x

கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாததால் ஒரத்தநாடு பகுதியில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு:

கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாததால் ஒரத்தநாடு பகுதியில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருட்டு சம்பவங்கள்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு நகரில் மோட்டார் சைக்கிள் திருட்டு, கடைகள் மற்றும் வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்தும் பொருட்டு ஒரத்தநாடு நகரில் முக்கிய இடங்களில் வர்த்தக சங்கம் சார்பில் 52 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.

இதன் கட்டுப்பாட்டு கருவிகள் ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு, கேமரா பதிவுகளை அங்கிருந்து சிறிய திரையில் பார்க்கும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டது. இதனால் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டுபிடித்து தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க கண்காணிப்பு கேமராக்கள் பதிவுகள் போலீசாருக்கு பெரும்உதவியாக இருந்தது. இதனால் ஒரத்தநாடு நகரில் மோட்டார் சைக்கிள் திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் சற்று குறைய தொடங்கியது.

கண்காணிப்பு கேமரா செயல்படவில்லை

இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பொக்லின் எந்திரம் மூலம் சாலை, வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது கண்காணிப்பு கேமராக்களின் முக்கிய இணைப்பு வயர்கள் சேதமடைந்தது. இதனால் ஒரத்தநாடு நகரில் அமைக்கப்பட்ட அனைத்து கண்காணிப்பு கேமராக்களும் முற்றிலுமாக செயல்படாமல் இருக்கிறது. இந்த நிலையில் ஒரத்தநாடு நகரில் மோட்டார் சைக்கிள் திருட்டு உள்ளிட்ட திருட்டு சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகிறது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் அச்சத்தில் உள்ளனர்.

எனவே ஒரத்தநாடு நகரில் செயல்படாமல் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் ஏற்பட்ட பழுதை சரி செய்து மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்து, திருட்டு சம்பவங்களை தடுக்க சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story