உசிலம்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 1 கிலோ வெள்ளி, 18 பவுன் நகை திருட்டு


உசிலம்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 1 கிலோ வெள்ளி, 18 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 15 July 2023 2:15 AM IST (Updated: 15 July 2023 2:16 AM IST)
t-max-icont-min-icon

உசிலம்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 1 கிலோ வெள்ளி, 18 பவுன் நகை திருடப்பட்டது.

மதுரை

உசிலம்பட்டி

உசிலம்பட்டி அருகே உள்ள மலைப்பட்டியை சேர்ந்தவர் அன்பு (வயது 50).இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தோசை மற்றும் முறுக்கு வியாபாரம் செய்து வருகிறார்.இதனால் ஜெய்ப்பூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.இந்த நிலையில் இவரது மலைப்பட்டியில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் 1 கிலோ வெள்ளி, 18 பவுன் தங்க நகைகளை திருடி விட்டு சென்றனர். தினசரி அந்த வீட்டை அன்புவின் தாயார் கழுவாயம்மாள் காலை மற்றும் மாலை வேளைகளில் சென்று பராமரித்து வந்துள்ளார்.நேற்று காலையில் வழக்கம் போல் மகனின் வீட்டுக்கு சென்ற கழுவாயம்மாள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் உடைக்கப்பட்ட வீட்டுக்குள் சென்று பார்த்த போது நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரிய வந்தது.

இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தங்கம், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவுகளையும் ஹார்டு டிஸ்க்கையும் திருடி சென்றது தெரிய வந்துள்ளது.


Next Story