2 டன் இரும்புக்கம்பிகள் திருட்டு


2 டன் இரும்புக்கம்பிகள் திருட்டு
x
தினத்தந்தி 18 Jan 2023 12:15 AM IST (Updated: 18 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம்- நாகை 4 வழிச்சாலை பணிக்காக வைத்திருந்த 2 டன் இரும்புக்கம்பிகளை திருடியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்

விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையே தற்போது 4 வழிச்சாலை பணிகள் நடந்து வருகிறது. இதில் விழுப்புரம்- புதுச்சேரி இடையேயான புறவழிச்சாலை பணிகளை மேற்கொண்டு வரும் தனியார் கட்டுமான ஒப்பந்த நிறுவனத்தில் மேற்பார்வையாளராக விழுப்புரம் அரசு ஊழியர் நகரை சேர்ந்த குமார் (வயது 43) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம், விழுப்புரம் அருகே காவணிப்பாக்கம், சாமிப்பேட்டை ரெயில்வே கேட் பகுதியில் உள்ள மேம்பாலம் அருகில் நடந்து வரும் கட்டுமான பணியை பார்வையிட சென்றார். அப்போது அங்கு கட்டுமான பணிக்காக அமைத்திருந்த 2 டன் இரும்புக்கம்பிகளை யாரோ மர்ம நபர்கள், அறுத்து அதனை திருடிச்சென்று விட்டது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ.40 ஆயிரமாகும்.

இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story