குருசடியில் 3½ பவுன் நகை திருட்டு


குருசடியில் 3½ பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 14 Jun 2023 1:21 AM IST (Updated: 14 Jun 2023 12:35 PM IST)
t-max-icont-min-icon

கருங்கல் அருகே குருசடியில் 3½ பவுன் நகை திருட்டு

கன்னியாகுமரி

கருங்கல்,

கருங்கல் அருகே உள்ள மாத்திரவிளையில் ஆரோப அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் கட்டுபாட்டின்கீழ் வட்டவிளையில் வேளாங்கண்ணி மாதா குருசடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த குருசடியில் உள்ள மாதா சொரூபத்தில் 8 கிராமில் 2 சங்கிலிகள், 6 கிராம் டாலர், 3 கிராமில் 2 மோதிரங்கள், 2 வெள்ளி கொலுசுகள் அணிவிக்கப்பட்டு இருந்தன. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் குருசடிக்கு வந்த பொதுமக்கள் அங்குள்ள சொரூபத்தின் கதவு திறந்த நிலையில் காணப்பட்டது. மேலும், மாதா சொரூபத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த 3½ பவுன் நகைகளும் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். யாரோ மர்ம நபர் நகையை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஆலய பொருளாளர் ஜோய்ஸ் பில்மா கொடுத்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.


Next Story