பூட்டிய வீட்டில் 5¾ பவுன் நகை திருட்டு


பூட்டிய வீட்டில் 5¾ பவுன் நகை திருட்டு
x

மதுரையில் பூட்டிய வீட்டில் 5¾ பவுன் நகை திருட்டு நடைபெற்றது.

மதுரை


மதுரை கீரைத்துறை மேலதோப்பு கணேசன் மனைவி கவிதா (வயது 43). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 5¾ பவுன் நகை திருடு போனது தெரியவந்தது. இது குறித்து அவர் கீரைத்துறை போலீசில் புகார் அளித்தார். அதில் மதுரை மாவட்டம் மேலூர் வெள்ளாளப்பட்டியை சேர்ந்த உறவுக்காரர் ஒருவர் மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்து இருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story