50 கிலோ காப்பர் ஒயர் திருட்டு


50 கிலோ காப்பர் ஒயர் திருட்டு
x

கங்கைகொண்டான் தனியார் தொழிற்சாலையில் 50 கிலோ காப்பர் ஒயர் திருட்டுப்போனது

திருநெல்வேலி

நெல்லை அருகே கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் சங்கர்நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் பாதுகாப்பு மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சுமார் 50 கிலோ எடையுள்ள காப்பர் ஒயர்கள் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அந்த தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய நபர்கள் யாருக்கும் இந்த திருட்டில் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story