8 பவுன் தங்க நகைகள் திருட்டு


8 பவுன் தங்க நகைகள் திருட்டு
x

8 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது.

புதுக்கோட்டை

திருச்சி சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் ஜான் ஆண்ட்ரோபூர்ணிமா (வயது 35). இவர் கீரனூரில் உள்ள மாமியார் வீட்டுக்கு வருவதற்காக கைக்குழந்தையுடன் திருச்சியிலிருந்து அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அருகில் 2 பெண்கள் அமர்ந்திருந்தனர். இதையடுத்து கீரனூர் பஸ் நிலையம் வந்ததும் குழந்தையையும், கை பையை எடுத்து தோளிலும் போட்டுக் கொண்டு கீழே இறங்கி வீட்டிற்கு வந்தார். பின்னர் பையை திறந்து பார்த்த போது அதில் வைத்திருந்த 4 பவுன் தங்க ஆரம், 4 பவுன் நெக்லஸ் உள்பட 8 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது குறித்து அவருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் இதுகுறித்து கீரனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story