2 கோவில்களில் உண்டியல் பணம் திருட்டு


2 கோவில்களில் உண்டியல் பணம் திருட்டு
x

2 கோவில்களில் உண்டியல் பணம் திருட்டு போனது.

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே ஆலம்பாடி வடக்கு தெரு பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை நேற்று முன்தினம் கோவில் நிர்வாகி அதே பகுதியை சேர்ந்த சின்னசாமி (வயது 85) பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று அதிகாலை அவர் கோவிலை திறக்க வந்தபோது, கோவிலின் முன்பக்க கிரில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலின் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம், சில்லரை காசுகள் திருட்டு போயிருந்தது. இதேபோல் ஆலம்பாடி கிழக்கு தெரு பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலிலும் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு, பணம் திருட்டு போயிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


Next Story