தர்காவில் உண்டியல்கள் திருட்டு


தர்காவில் உண்டியல்கள் திருட்டு
x

தர்காவில் உண்டியல்கள் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி யூனியன் அலுவலகம் அருகே மகான் பக்கீர் பாவா அவுலியா தர்கா உள்ளது. நேற்று முன்தினம் தர்காவின் மெயின் கதவு பூட்டை உடைத்து மர்மநபா்கள் உள்ளே புகுந்தனர். அங்கு இருந்த 2 உண்டியல்களை திருடிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை தர்கா பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக சேரன்மாதேவி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். உண்டியலில் சுமார் ரூ.2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story