செல்போன் கோபுர உதிரி பாகங்கள் திருட்டு


செல்போன் கோபுர உதிரி பாகங்கள் திருட்டு
x

ராஜபாளையத்தில் செல்போன் கோபுர உதிரி பாகங்கள் திருட்டு போனது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே சேத்தூரிலிருந்து-முகவூர் செல்லும் சாலையில் செல்போன் கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த செல்போன் கோபுரம் நிறுவப்பட்ட இடத்தை பார்வையிட சென்னையை சேர்ந்த செல்போன் கோபுர அதிகாரி முத்து வெங்கடகிருஷ்ணன் (வயது 52) என்பவர் வந்திருந்தார். அப்போது கோபுரத்தில் இருந்த உதிரி பாகங்கள் திருடி சென்றது தெரியவந்தது இதுகுறித்து முத்து வெங்கடகிருஷ்ணன், ராஜபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த சம்பவம் குறித்து சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story