துணை மின்நிலையத்தில் தாமிர கம்பிகள் திருட்டு
கடலூர் கேப்பர்மலை துணை மின்நிலையத்தில் தாமிர கம்பிகளை திருடியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்
கடலூர் முதுநகர்,
கடலூர் அருகே கேப்பர் மலையில் மின்வாரிய துணை மின் நிலையம் உள்ளது. இங்கு தானியங்கி மின்மாற்றியில் இருந்த, 45 கிலோ எடை கொண்ட 3 தாமிர பட்டைகளை மர்ம நபர்கள் திருடி சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் (பராமரிப்பு) குமார் கொடுத்த புகாரின் பேரில், கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதன் மதிப்பு ரூ. 10 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story