மின்மாற்றியில் தாமிர கம்பிகள் திருட்டு


மின்மாற்றியில் தாமிர கம்பிகள் திருட்டு
x
தினத்தந்தி 5 Feb 2023 12:15 AM IST (Updated: 5 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் அருகே மின்மாற்றியில் தாமிர கம்பிகள் திருட்டு

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் அருகே பல்லகச்சேரி கிராமம் ஏரிக்கரை பகுதியில் உள்ள மின்மாற்றியில் இருந்து சூளாங்குறிச்சி, பல்லகச்சேரி ஆகிய பகுதியை சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட விவசாய மின் மோட்டார்களுக்கு மின்சார வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று மின் கம்பங்களில் பொருத்தப்பட்டிருந்த மின் மாற்றி கீழே விழுந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அதிகாரிகள் விரைந்து வந்து பார்த்தபோது யாரேர் மர்ம நபர்கள் மின்கம்பத்தில் இருந்த மின் மாற்றியை கீழே தள்ளிவிட்டு அதில் இருந்த சுமார் 625 கிலோ எடையுள்ள தாமிர கம்பிகளை திருடி சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து தாமிர கம்பிகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதற்கிடையே மின் மாற்றியில் இருந்த தாமிர கம்பிகளை மர்ம நபர்கள் திருடி சென்றதால் மின்சாரம் தடைபட்டு அந்த பகுதியில் உள்ள கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எனவே மாற்று மின்மாற்றியை உடனடியாக அமைத்து மின்சாரம் வினியோகம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடு்த்து வருகின்றனர்.


Next Story