மின் மோட்டார் வயர்கள் திருட்டு


மின் மோட்டார் வயர்கள் திருட்டு
x

மின் மோட்டார் வயர்கள் திருட்டப்பட்டுள்ளது.

கரூர்

கரூர் வாங்கல் அருகே உள்ள கருப்பம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 72). விவசாயியான இவருக்கு, அப்பகுதியில் சொந்தமாக தோட்டம் ஒன்று உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று தோட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கு மின் மோட்டார் வயர்கள் மற்றும் பீஸ்கேரியர் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து பழனிசாமி கொடுத்த புகாரின்பேரில், வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிந்து, மர்மநபர்களை தேடி வருகிறார்.


Next Story