விவசாய நிலங்களில் மின் வயர்கள் திருட்டு


விவசாய நிலங்களில் மின் வயர்கள் திருட்டு
x

கெங்குவார்பட்டி பகுதியில் விவசாய நிலங்களில் மின் வயர்கள் திருடுபோனது

தேனி

கெங்குவார்பட்டி பகுதியில் கடந்த ஒரு மாதமாக விவசாய நிலங்களில் மின்வயர்கள் திருட்டு அதிக அளவில் நடக்கிறது. இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் நேற்று காலை தோட்டங்களுக்கு சென்றனர். அப்போது அங்கு ராமராஜ், செல்லமுத்து, திருமேனி, சுந்தர் உள்பட 6 பேரின் விவசாய நிலங்களில் இருந்த மின்வயர்கள் திருடுபோயிருந்தது. இதில் மின் இணைப்பில் இருந்து மோட்டாருக்கு செல்லும் வயர் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் உள்ள வயர் திருடுபோனது. மேலும் அந்த பகுதியில் மோட்டார்சைக்கிளில் பெட்ரோல் திருட்டு, வீடுகளில் புகுந்து திருட்டு முயற்சி சம்பவங்களும் நடந்தது. எனவே தொடர் திருட்டை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story