ஸ்டூடியோவில் பொருட்கள் திருட்டு


ஸ்டூடியோவில் பொருட்கள் திருட்டு
x

ஸ்டூடியோவில் பொருட்கள் திருட்டு போனது.

தர்மபுரி

பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் ராகுல் (வயது 22). இவர் பழைய தர்மபுரி கூட்டு ரோடு பகுதியில் ஸ்டூடியோ நடத்தி வந்தார். இவர் வழக்கம் போல் இரவு ஸ்டூடியோவை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் காலையில் பார்த்த போது ஸ்டூடியோ பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்த கேமரா உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போனது. இதுகுறித்த புகாரின் பேரில் தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story