காரில் வைத்திருந்த நகை-பணம் திருட்டு
காரில் வைத்திருந்த நகை-பணம் திருட்டுபோனது.
மணிகண்டம்:
நகை-பணம் திருட்டு
மணிகண்டம் அருகே உள்ள செவல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார்(வயது 33). இவர் தனது 20 கிராம் தங்க நகையை நாகமங்கலத்தில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்திருந்தார். அந்த நகையை நேற்று முன்தினம் வங்கியில் இருந்து மீட்டுக்கொண்டு வீட்டிற்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
நாகமங்கலத்தில் உள்ள ஒரு கடையின் முன்பு காரை நிறுத்திவிட்டு, கடைக்கு சென்று பொருட்களை வாங்கினார். பின்னர் மீண்டும் காருக்கு வந்து பார்த்தபோது காரில் வைத்திருந்த 20 கிராம் தங்க வளையல் மற்றும் ரூ.10 ஆயிரம் ஆகியவை திருட்டுப் போயிருந்தது.
போலீசார் விசாரணை
இதனால் அதிர்ச்சி அடைந்த தினேஷ்குமார் இதுகுறித்து மணிகண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு வழக்குப்பதிவு செய்து, சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, காரில் வைத்திருந்த தங்க நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.