நகை, பணம் திருட்டு


நகை, பணம் திருட்டு
x

வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்றனர்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 43). இவர் சம்பவத்தன்று குடும்பத்துடன் கேரளாவுக்கு சென்றுள்ளார். பின்னர் இரவு வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்ற போது அங்கு பீரோவின் கதவு உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் வெளியே சிதறி கிடந்தது. பீரோவில் இருந்த பொருட்களை கண்ணன் மற்றும் குடும்பத்தினர் சரி பார்த்த போது அதில் வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பணம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மற்றும், 1 பவுன் கம்மல் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இதை தொடர்ந்து இந்த திருட்டு சம்பவம் குறித்து கண்ணன் திருத் தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story