கப்பல் ஊழியர் வீட்டில் நகை திருட்டு


கப்பல் ஊழியர் வீட்டில் நகை திருட்டு
x

பாளையங்கோட்டையில் கப்பல் ஊழியர் வீட்டில் நகை திருட்டு போனது.

திருநெல்வேலி

நெல்லை:

பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் மிஸ்பா நகரைச் சேர்ந்தவர் குரு பிரசாந்த் (வயது 34). இவர் கப்பலில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் 6 மாதத்திற்கு ஒரு முறை விடுமுறையில் சொந்த ஊருக்கு வருவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த அவர் தனது சகோதரியின் வீட்டுக்கு சென்று விட்டார்.

பின்னர் நேற்று முன்தினம் குரு பிரசாந்த் தனது வீட்டிற்கு சென்றபோது, வீட்டின் முன்பக்க கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததையும், பீரோவில் இருந்த 2 பவுன் நகை, செல்போன், ரூ.1,500 ஆகியவை திருட்டு போனதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார். குரு பிரசாந்த் வீட்டில் இல்லாதபோது, அவரது வீட்டின் கதவை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, வீடு புகுந்து திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story