ராணுவ வீரர் வீட்டில் நகை, பணம் திருட்டு
மதுரையில் ராணுவ வீரர் வீட்டில் நகை, பணம் திருட்டு நடைபெற்றது.
மதுரை,
மதுரை சிலைமான் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி உஷா ராணி (வயது 53). ராதாகிருஷ்ணன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் சொந்த ஊருக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் சொந்த வேலை காரணமாக வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றனர். இந்தநிலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் மாடியில் உள்ள அறை கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 55 கிராம் தங்க நகைகள், 4 ஜோடி வெள்ளி கொலுசுகள், ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் வெளிநாட்டு பணம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. யாரோ மர்ம நபர்கள் ராதாகிருஷ்ணனின் வீட்டை நோட்டமிட்டு அவர்கள் வெளியூர் சென்றிருந்தபோது கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை-பணத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து உஷாராணி சிலைமான் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.