கோவிலில் நகை, பணம் திருட்டு
ராதாபுரம் அருகே கோவிலில் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருநெல்வேலி
ராதாபுரம்:
ராதாபுரம் அருகே சமூகரெங்கபுரத்தில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு வழக்கமான பூஜைகளை முடித்துக் கொண்டு பூசாரி தங்கதுரை வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் நேற்று காலை கோவிலுக்கு வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பணத்தையும், அம்மன் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க நகைகளையும் மர்மநபர்கள் திருடிச் சென்றுவிட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story