அம்மன் கோவிலில் விளக்குகள் திருட்டு


அம்மன் கோவிலில் விளக்குகள் திருட்டு
x
தினத்தந்தி 25 Jun 2023 12:15 AM IST (Updated: 25 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

புத்தளம் அருகே அம்மன் கோவிலில் விளக்குகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

மேலகிருஷ்ணன்புதூர்:

புத்தளம் அருகே அம்மன் கோவிலில் விளக்குகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

அம்மன் கோவில்

புத்தளம் அருகே உள்ள பால்குளம் பகுதியில் இசக்கியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சம்பவத்தன்று இரவு 11 மணிக்கு பூஜையை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு பூசாரி சென்றார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கோவில் பொருளாளர் ராஜலிங்கத்திற்கும், சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

திருட்டு

அதன்பேரில் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மர்மநபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்குள்ள பூஜை பொருட்கள் வைக்கும் அறையின் கதவையும் உடைத்து அங்கு இருந்த வெண்கல குடம், வெண்கல குத்து விளக்குகள் உள்பட ஏராளமான பொருட்களை திருடி சென்றுள்ளனர். திருட்டு போன பொருட்களின் மதிப்பு ரூ.25 ஆயிரம் என கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இதுதொடர்பாக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து ராஜலிங்கம் சுசீந்திரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story