ரசாயன ஆலையில் பொருட்கள் திருட்டு


ரசாயன ஆலையில் பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 15 Feb 2023 12:15 AM IST (Updated: 15 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் ரசாயன ஆலையில் பொருட்கள் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் தாலுகா கரிவலம்வந்தநல்லூரை அடுத்த சோலைசேரி அருகில் ரசாயன ஆலை உள்ளது. இங்கு ராஜபாளையத்தை சேர்ந்த சிவதர்மராஜா (வயது 49) என்பவர் மேலாளராக உள்ளார். இந்த ஆலை தற்போது இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் சிவதர்மராஜா அடிக்கடி ஆலைக்கு சென்று பார்த்து வந்துள்ளார். கடந்த 3 வாரமாக வேறு பணிகள் இருந்ததால் ஆலைக்கு செல்லவில்லை என தெரிகிறது. சம்பவத்தன்று ஆலைக்கு சென்றபோது வெளியே பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது 6 மின்மோட்டார்கள் மற்றும் ரசாயன உற்பத்திக்கு தேவைப்படும் தயாரிப்பு உபகரணங்கள் அனைத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சிவதர்மராஜா, கரிவலம்வந்தநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story