பால் விற்பனை நிலையத்தில் பணம் திருட்டு


பால் விற்பனை நிலையத்தில் பணம் திருட்டு
x

கருங்கலில் பால் விற்பனை நிலையத்தில் பணம் திருட்டு

கன்னியாகுமரி

கருங்கல்,

கருங்கல் பஸ் நிலையத்தில் பெருமாங்குழியை சேர்ந்த குளோரி (வயது 46) என்பவர் ஆவின் பால் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் குளோரி கடையை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலையில் அவர் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உடனே உள்ளே சென்று பார்த்தார். அங்கு அவர் வைத்து இருந்த ரூ.6 ஆயிரம் திருட்டு போனது தெரிய வந்தது. இதுபற்றி குளோரி கருங்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவான கைரேகைகளை சேகரித்தனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளின் உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story