தூத்துக்குடியில் எலக்ட்ரிக்கல் கடையில் ரூ.1½ லட்சம் திருட்டு


தூத்துக்குடியில் எலக்ட்ரிக்கல் கடையில்   ரூ.1½ லட்சம் திருட்டு
x

தூத்துக்குடியில் எலக்ட்ரிக்கல் கடையில் ரூ.1½ லட்சம் திருடிய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் எலக்ட்ரிக்கல் கடையில் ரூ.1½ லட்சம் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

எலக்ட்ரிக்கல் கடை

தூத்துக்குடி ஜோதிபாய் காலனியை சேர்ந்தவர் முத்து. இவருடைய மகன் லிங்கராஜ் (வயது 37). இவர் தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கடையில் இருந்த மேஜை டிராயரில் ரூ.1½ லட்சம் பணம் வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டாராம். நேற்று காலையில் லிங்கராஜ் கடையை திறக்க வந்து உள்ளார்.

திருட்டு

அப்போது கடையின் ஷட்டர் கதவை இரும்பு கம்பியால் நெம்பி அதன் வழியாக மர்ம நபர் உள்ளே நுழைந்து இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து லிங்கராஜ் கடையின் உள்ளே சென்று பார்த்தாராம். அங்கு மேஜை டிராயரில் இருந்த சுமார் ரூ.1½ லட்சம் பணத்தை மர்ம நபர் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த லிங்கராஜ் தூத்துக்குடி வடபாகம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் திருட்டு நடந்த கடையை பார்வையிட்டு பரிசோதனை செய்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளையும் பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Next Story